மன்னார்குடியை அடுத்த கர்ணாவூர் பகுதியில் வேங்கைபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மயானகொட்டகை முறையான பராமரிப்பின்றி உள்ளது. மயான கொட்டகை கட்டிடத்தின் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புகம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மயான கட்டிடம் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் மயான கொட்டகையை அதிகாரிகள் இடித்துவிட்டு புதிய மயான கொட்டகை கட்டிடத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.