தஞ்சை முனிசிபல் காலனி பகுதியில் எழில் நகரில் பள்ளிவாசல் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறி செல்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.