மாணவர்கள் அவதி

Update: 2025-08-24 11:00 GMT

அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்தின் அருகே அதிகளவில் பன்றிகளும், தெருநாய்களும் சுற்றித்திரிகின்றன. இவை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களை பயமுறுத்தும் வகையிலும், வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றித்திரிவதால் அனைவரும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் மற்றும் பன்றிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்