தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-17 17:52 GMT

சேலம் மாநகராட்சி 8-வது வார்டு காமராஜர் நகர் 2-வது தெரு, 2-வது கிராசில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. தினமும் அவை அங்குள்ள வீட்டின் முன்பு அசுத்தம் செய்து விடுகின்றன. காலையில் எழுந்ததும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் தெருநாய்கள் தொல்லை இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. அதேபோல அந்த வழியாக செல்லும் பொதுமக்களை தெருநாய்கள் துரத்துகின்றன. இதனால் அவர்கள் தப்பி ஓடும்போது தவறி கீழே விழுந்து காயமடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

-ஜான், காமராஜர்நகர், சேலம்.

மேலும் செய்திகள்