தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-17 17:52 GMT

சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவில் தெரு, சிங்காரப்பேட்டை தெற்கு தெரு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்பவர்களை நாய்கள் துரத்துவதால், அவர்கள் கீழே விழுவது மற்றும் காயம் அடைவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. சாலைகளில் குறுக்கே நாய்கள் ஓடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்பொதுமக்கள், குகை, சேலம்.

மேலும் செய்திகள்