புவனகிரி அடுத்த கீரப்பாளையத்தில் வாழக்கொல்லை பாசன வாய்க்கால் உள்ளது. ஆக்கிரமிப்புகளால் சுருங்கிப்போன இவ்வாய்க்கால் வழியாக கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.