செஞ்சி அடுத்த மேல்சேவூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் பராமரிப்பின்றி கடும் சேதமடைந்துள்ளது. மேலும் சுற்றுப்புற சுவர்களில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஒருவித பயத்துடனேயே தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.