அரசூர் மற்றும் குமாரமங்கலம் பகுதிகளில் கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. இங்கு கால்நடைகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. இதனால் கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.