தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச் செல்கிறது. மேலும் விரட்ட வருபவர்களை கடிக்கப் பாய்கின்றன. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.