தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-17 13:03 GMT

அரியலூர் மாவட்டம் பொய்யூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்