புதுக்கோட்டை திருமயம் சாலையில் பொதுமக்களின் வசதிக்காக சாலையோரம் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்த தெருவிளக்குகளை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்சார பெட்டி பழுதடைந்து உள்ளது. இதனால் தெருவிளக்குகள் அணைக்கப்படாமல் பகல் நேரத்திலும் எரிந்து வருகிறது. இதனால் மின்சார விரயம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள மின்சார பெட்டியை சரிசெய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.