சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2026-01-11 16:01 GMT

கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் மணவாடி ஊராட்சி கத்தாளபட்டி காலனியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை மூலம் சிறியளவிலான சமுதாய சுகாதார வளாகம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாக கட்டிடத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும், இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. மேலும் இப்பகுதி புதர்மண்டி கிடப்பதோடு, அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்