கரூர் மாவட்டம் குளத்துப்பாளையம் பகுதியில் இருந்து கரூர் செல்வதற்கு ரெயில் பாலத்துக்கு கீழ் வாய்க்கால் வழியாக தான் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வந்தன. இதையடுத்து வாகன ஓட்டிகளின் வசதிக்காக ரெயில் பாலத்துக்கு கீழே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் வாய்க்கால் தண்ணீர் மற்றும் மழைநீர் சுரங்கப் பாதைக்குள் வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.