செங்கல்பட்டு மாவட்டம் கீழ்கட்டளை பெரிய தெருவில் உள்ள காலி மனை முன்பாக போக்குவரத்துக்கு இடையூறாக உபயோகம் இல்லாமல் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்தியும், இயற்கை உபாதை கழிக்கும் இடமாகவும் மாற்றியுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் , குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இந்த பிரச்சினையை சரிசெய்ய இதுதொடர்பான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.