மேட்டூர் அனல் மின் நிலைய 4 ரோடு ரவுண்டானா அருகில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரத்தில் ஒரு மரம் படர்ந்து சாலை நடுவே வரை வளர்ந்துள்ளது. இதனால் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்கள் செல்வதற்கு இடையூறாக இருப்பதால் பஸ்கள் அனைத்தும் அந்த பகுதியை விட்டு சாலை நடுவே தள்ளி நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது போன்று மேட்டூர் நெடுஞ்சாலையில் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் சாலை நடுவே வளர்ந்து போக்குவரத்து இடையூறாக உள்ளன. இதனை சம்பந்தப்பட்ட துறையினர் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.