பொதுமக்கள் அவதி

Update: 2025-08-17 11:18 GMT

அரியலூர் நகரில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்குள்ள அம்மா உணவகத்தின் அருகே ஏராளமான மதுப்பிரியர்கள் அமர்ந்து மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை அங்கேயே போட்டுச்செல்கின்றனர். இரவும், பகலும் என பொதுவெளியில் அமர்ந்து மது அருந்துபவர்களால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்