மாணவ-மாணவிகள் அச்சம்

Update: 2025-08-17 10:31 GMT

கோத்தகிரியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வளாகம் முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. ஏற்கனவே அந்த பகுதி வனவிலங்குகளின் புகலிடமாக மாறி வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக அந்த பகுதியில் சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்தில் உள்ளனர். அவர்களை வனவிலங்குகளை தாக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே உடனடியாக புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்