தொண்டாமுத்தூர் அருகே தென்னமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட புத்தூர் புது காலனி பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு சமுதாய கூடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த சமுதாய கூடத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அமர்ந்து மது குடித்து வருகின்றனர். காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அது சமுதாய கூடமா அல்லது மது பாரா என்ற சந்தேகம் எழுகிறது. அத்துடன் அந்த சமுதாய கூடத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு சமூக விரோதிகள் அட்டகாசத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.