கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இங்கு தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை நடைபயிற்சி மேற்கொள்பவர்களை துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.