கோத்தகிரி கடைவீதி அருகே பொது மயானம் அமைந்துள்ளது. இந்த மயானம் முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு கொண்டு சென்று வரும் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகிறார்கள். அத்துடன் வனவிலங்குகளின் புகலிடமாகவும் மயானம் மாறி வருகிறது. எனவே மயானத்தில் வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.