ஊத்துக்குளி அருகே மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காவிரிநகர் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையம் முன்பு, சில மர்மநபர்கள் மது அருந்துதல், கஞ்சா விற்பனை செய்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்காரணமாக அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகள் பயத்தில் உள்ளனர். எனவே அங்கன்வாடி மையம் முன் அமர்ந்து மது அருந்தும் நபர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.