நாய்களால் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொலைக்காட்சியில் நாய்கள் குழந்தைகளை கடித்து குதறும் வீடிேயாக்கள் குலைநடுங்க வைக்கிறது. திருப்பூரில் நாய்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவை ஆங்காங்கே குப்பை தொட்டிகள் ஓரம் நின்று கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. நாய்கள் தொல்லையால் தினமும் விபத்து ஏற்படுகிறது. எனவே திருப்பூரில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்பறப்படுத்த வேண்டும்.