வடிகால் ஓடை தேவை

Update: 2025-08-10 07:33 GMT

தென்தாமரைகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குமாரப்பெருமாள்விளை பகுதியில் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் வடிந்தோட வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் மழைநீர் வடிந்தோட அந்த பகுதியில் வடிகால் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வகுமார், தென்தாமரைகுளம்.

மேலும் செய்திகள்