தெருவிளக்கு எரிவதில்லை

Update: 2025-08-03 17:20 GMT

சேலம் 4 ரோட்டில் இருந்து மிதிலா சாலை செல்லும் வழியில் உள்ள தெருவிளக்கு எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே செல்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருவிளக்கு எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மதன், சேலம்.

மேலும் செய்திகள்