ஏற்காடு அண்ணா பூங்காவில் இதுபோன்று அடிக்கடி மரக்கிளைகள் முறிந்து விழுந்து விபத்து நடப்பது வாடிக்கையாக உள்ளதாக அருகிலுள்ள வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஏற்காடு அண்ணா பூங்கா பகுதியை சுற்றி ஏராளமான காய்ந்த பட்டுப்போன மரங்கள் இருப்பதாகவும் அடிக்கடி இது போன்று முறிந்து விழுவதால் சுற்றுலா பயணிகள் அஞ்சுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காய்ந்த, பட்டுப்போன மரங்களை அகற்றிட முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்காடு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-மணி, ஏற்காடு.