செங்கம் சுற்று வட்டார கிராமங்களான மண்மலை, கரியமங்கலம், கொட்டகுளம், இறையூர் ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையோர தள்ளுவண்டி கடைகள், சிற்றுண்டி கடைகள், உணவகங்கள், இறைச்சிக்கடைகளில் இருந்து வீசப்படும் கழிவுகளை சாப்பிடுவதற்காக தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அப்போது தெருநாய்கள் சண்டையிட்டுக் கொள்கின்றன. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணப்பன், செங்கம்.