மொரப்பூரிலிருந்து ஆவலம்பட்டி, அப்பியம்பட்டி, சிந்தலப்பாடி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல போடிநாயக்கன்பட்டி அருகே உள்ள ரெயில்வே பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பாலத்தின் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக மூங்கில் மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மூங்கில் மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர். இதனால் மூங்கில் மரத்தின் அடிப்பகுதிகள் தீயில் எரிந்து கருகி உள்ளன. மரங்களை வளர்க்க வலியுறுத்தும் அரசு இதுபோன்ற மரங்களுக்கு தீ வைத்து எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார் அன்பழகன், தாசர அள்ளி.