கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் பெங்களூரு பஸ்கள் நிற்கும் இடத்திலும், பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நுழையும் இடத்திலும் ஆண் பயணிகளுக்காக இயற்கை உபாதை கழிப்பதற்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக ஓசூர், பெங்களூரு செல்ல இருக்கும் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் நேரத்தில் மிகுந்த சிரமத்துடன் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வராஜ், குருபரப்பள்ளி.