கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் பிரதான சாலை உள்ளது. அதிக அளவில் வாகனங்கள் கடந்து செல்வதால் இந்த இடத்தில் இரவு நேரங்களில் விபத்தை தடுக்கும் பொருட்டு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எரியவில்லை.
இதனால் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி பிரியும் சாலை முழுவதும் இருட்டாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சூளகிரி மேம்பாலத்தையொட்டி உத்தனப்பள்ளி பிரிவு சாலையில் உள்ள மின்விளக்கை சரி செய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனியப்பா, சூளகிரி.