தினத்தந்திக்கு நன்றி

Update: 2025-08-03 16:47 GMT

மதுரை வார்டு எண்-40 ஆவின் நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள திருப்பத்தில் வேகத்தடை அமைக்கக்கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு தினத்தந்தி புகார் பெட்டியில்  செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கண்ட பகுதியில் புதிய வேகத்தடை அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சமின்றி அச்சாலையில் பயணிக்கின்றனர். எனவே இச்செய்தியை புகார் பெட்டி மூலம் வெளியிட்ட தினத்தந்திக்கும், வேகத்தடை அமைத்து தந்த அதிகாரிகளுக்கும் ஆவின் நகர் பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.



மேலும் செய்திகள்