அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் அருகே ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. நாளுக்கு நாள் அப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் எப்போதும் அச்சத்துடனேயே இந்த பகுதியில் செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது. அதிலும் இரவு நேரங்களில் இந்த சாலையில் ஏராளமான தெருநாய்கள் கூட்டமாக நின்றுகொண்டு குரைத்துக்கொண்டே அவ்வழியாக செல்பவர்களை கடிக்க பாய்கின்றன. இதனால் அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.