கரூா் மாவட்டம் தாந்தோன்றி ஒன்றியம் மணவாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி இளைஞர்கள், இளம் பெண்கள் பலரும் கரூா் உள்ளிட்ட நகரப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர். இவ்வாறு வேலைக்கு செல்வோா்களுக்கு அவர்களின் வங்கி கணக்கின் மூலமே தொழில் நிறுவனங்கள் சம்பளம் வழங்குகின்றன. இப்படி பலரும் வங்கி கணக்கில் வரும் பணத்தை தாந்தோன்றிமலை, வெள்ளியணை பகுதிகளுக்கு சென்று அங்குள்ள ஏ.டி.எம். மையத்தில் தான் எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு கால விரையமும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தை மணவாடியில் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டு என கேட்டுக்கொள்கிறோம்.