அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் அம்பாப்பூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, படுக்கை வசதியுன் கூடிய 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.