கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அச்சான்குளம் கிராமத்தில் கன்னிமார்குளம் உள்ளது. இந்த குளத்தின் மறுகால் தண்ணீரானது ஒரு வடிகால் ஓடை வழியாக ஊரின் தெரு வழியாக புத்தனார் கால்வாயை சென்றடைகிறது. தற்போது இந்த ஓடை மண், குப்பைகள் நிரம்பி மூடி காணப்படுகிறது. இதனால், மழை காலத்தில் குளம் நிரம்பி தண்ணீர் ஓடை வழியாக செல்லமுடியாத நிலையும், தெருவில் தேங்கும்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் ஓடையை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.