கழிவறையை சீரமையுங்கள்

Update: 2025-07-27 19:20 GMT

காங்கயம் பஸ் நிலையத்தில் வடக்கில் நகரப் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கட்டண கழிப்பிடம் மற்றும் பொது கழிப்பிடம் உள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் கழிப்பிடத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் கட்டணமில்லா பொது கழிப்பிடத்தினுள் குப்பை குவியல்களும், மதுபாட்டில்களும் நிறைந்து அசுத்தமாக காணப்படுகிறது. மேலும் உள்ளே செல்ல முடியாமல் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே கழிவறையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகம், காங்கயம்.

மேலும் செய்திகள்