நாய்கள் தொல்லை

Update: 2025-07-27 19:19 GMT


திருப்பூர் பழவஞ்சிபாளையம் முதல் கே.செட்டிப்பாளையம் வரை சாலையோரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். மேலும் குப்பைக்கழிவுகளை இழுத்து வந்து சாலையில் நாய்கள் போட்டு செல்கிறது. இதேபோல் பெண்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் விரட்டுகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே சாலையோரங்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

ராமன், பழவஞ்சிபாளையம்.

மேலும் செய்திகள்