மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காளியம்மன் கோவில் தெருவில் இருந்து மோகனூர் வாய்க்கால் வழியாக மின் மயான சுடுகாடு, செங்கத்துறை, மற்றும் காவிரி ஆற்று தரைவழி பாலம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும் அந்த குப்பைகளை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் வாய்க்கால் அருகில் உள்ள மரங்களின் அடிப்பகுதி பாதி எரிந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மோகன், மோகனூர்.
---