மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் சிறுவர்கள், பெண்கள் தனியாக செல்ல அச்சப்படுகின்றனர். மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி செல்கின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
-சரவணன், மாரண்டஅள்ளி.