சுகாதார சீர்கேடு

Update: 2025-07-27 18:18 GMT

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கட சமுத்திரம் ஊராட்சி முருகன் கோவில் அடிவாரத்தில் அண்ணா நகர் உள்ளது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக்காக கோழி, பன்றிகளை வெட்டி விற்பனை செய்கின்றனர். பின்னர் அவற்றின் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பன்றி, கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தென்றல், பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும் செய்திகள்