மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் பாலத்தில் உள்ள சாலையும் ஆங்காங்கே பெயர்ந்து பள்ளமும், மேடுமாக காணப்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாலத்தில் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். விபத்தை தவிர்க்க மேற்கண்ட பாலத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?