கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட புழுக்கொல்லியில் சாலையோரத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள புதர்களை அகற்ற வேண்டும். இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே புதர்களை அகற்ற உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.