விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. இந்த் தெருநாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்களை அச்சுறுத்துவதுடன் துரத்தி சென்று கடிக்கின்றது. மேலும் சாலையில் செ்ல்லும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாறு தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.