சிவகங்கை நகர் வாரச்சந்தை வீதி, மஜித் ரோடு, அரண்மனை வாசல் பகுதி, வ.உ.சி. தெரு ஆகிய இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இந்த தெருநாய்கள சாலையில செல்வோரை துரத்தி சென்று அச்சுறுத்துவதோடு, சாலையில் செல்லும் வாகனத்திற்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்தி செல்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து செல்வார்களா?