திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பேட்டையில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தெருக்களில் சில பகுதிகளில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பெண்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி மர்மநபர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.