தெருநாய்கள் தொல்லை

Update: 2025-07-27 11:21 GMT

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை வாஞ்சிநாதன் நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள் மற்றும் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வீட்டின் வெளியே நிறுத்திவைக்கும் வாகனங்கள் மற்றும் காலணிகளை கடித்து குதறி சேதப்படுத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்