அரியலூர் மாவட்டம், வாரணவாசி பகுதியில் அமைந்துள்ள ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. கூட்டம் கூட்டமாக சுற்றிவரும் தெருநாய்கள் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், அருகேயுள்ள கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. பல நேரங்களில் சாலைகளில் குரைத்துக்கொண்டே அங்கும் இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் நிலவி வருகிறது. இதனால் பலதரப்பட்ட மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.