சேதமடைந்த பாதாள சாக்கடை மூடி

Update: 2025-07-27 11:09 GMT

அரியலூர் பஸ் நிலையம் அருகேயுள்ள காந்தி சிலை முன்பாக பாதாள சாக்கடைக்கான மூடி உள்ளது. சிமெண்டால் ஆன இந்த மூடி தற்போது முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. அதனை சுற்றிலும் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளது. மேலும் நெடுநேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும், முதியவர்களும் அந்த பாதாள சாக்கடை மூடியில் அமர்கின்றனர். அதுபோன்ற சமயங்களில் அவர்கள் உள்ளே விழுந்து காயப்படும் அபாயமும் அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்