கோவையை அடுத்த இருகூர் பேரூராட்சி காமாட்சிபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.