மின் விளக்குகள் எரிவதில்லை

Update: 2025-07-20 16:35 GMT

தர்மபுரி-சேலம் சாலையில் மைய தடுப்பு பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் செந்தில் நகர் பகுதி முதல் கலெக்டர் அலுவலகம் வரை உள்ள பகுதியில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் அவ்வப்போது எரிவதில்லை. இதனால் இந்த பகுதி இருளில் மூழ்குகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. எனவே இரவு நேரங்களில் மின்விளக்குகள் தொடர்ந்து எரிவதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், இலக்கியம்பட்டி.

மேலும் செய்திகள்