உளுந்தூர்பேட்டை- திருச்சி மெயின்ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில் மதுப்பிரியர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் சாலையில் செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களை கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்ல மாணவிகள், பெண்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.